June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அருப்புக்கோட்டை விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை

விருதுநகர், ஏப்.21

தகுதியுள்ள விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்து தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் மூலம் கிசான் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான
ஏற்பாடுகள் செய்யப்பட்டு எதிர்வரும் 24.4.22 முதல் 01.5.22 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வருவாய் கிராமங்களில் நேரடி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் மேற்படி முகாமில் கலந்து கொண்டு உரிய ஆவணங்களை அளித்து கடன் அட்டை பெற பதிவு செய்யலாம். மேலும் உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் அதன் மூலம் பயனாளிகளாக பதிவு செய்தல் திட்டங்களில் பயன் பெறும் முறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அனைவரும் பங்கு பெற்று பயன்பெற வேண்டி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முகாம் நடைபெறும் கிராமம் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று

அருப்புக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

Spread the love