June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அரூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.34 கோடிக்கு பருத்தி ஏலம்

தர்மபுரி, ஜூன் 14

தர்மபுரி மாவட்டம், அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை இந்த கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 534 விவசாயிகள், 4,000 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இந்த வாரம் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ரூ. 9,499 முதல் ரூ. 11,499 வரை ஏலம் போனது. ரூ. 1 கோடியே 34 லட்சத்திற்கு பருத்தி ஏலம்நடைபெற்றுள்ளது.

Spread the love