திருச்சி, மார்ச் 11
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சிக்காக வேப்பந்தட்டை கிராமத்தில் தங்கியுள்ளனர்.அதன் ஒரு பகுதியாக தேசிய அறிவியல் தினத்தில், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழல்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் நீடித்த நிலையான வருங்காலத்தை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த பார்வை என்னும் இந்த ஆண்டின்அறிவியல் தினத்திற்கான கருப்பொருளையும் மாணவர்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதோடு பள்ளி தலைமை ஆசிரியை தலைமையில் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
Spread the love