June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அறிவியல் ரீதியான தேனீ வளர்ப்பு இணையதள பயிற்சி

மதுரை, ஏப்.4

தேசிய தேனீ வாரியம், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, புதுதில்லி நிதியுதவியுடன் தேனீ வளர்ப்பு குறித்த மூன்று நாட்கள் இணையதள பயிற்சியானது வரும் 05.04.2022 முதல் 07.04.2022 வரை மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம், மதுரை ஆகியோரால் இணைந்து நடத்தப்பெறவுள்ளது. இப்பயிற்சியில் தேனீக்களின் வகைகள் மற்றும் பண்புகள், தேனீக் குடும்பமும் அதன் பணிகளும், வணீக ரீதியில் தேனீ வளர்ப்பு, தேனீ கூட்டங்களைப் பராமரித்தல், தேனீக்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள்-மேலாண்மை முறைகள், தேன்-மதிப்புக்கூட்டுதல், ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் தேனீ வளர்ப்பு போன்ற தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்படும். இதனைத்தவிர தேனீ வளர்ப்பில் வெற்றி கண்ட தொழில் முனைவோர்களும் தொழில்நுட்ப உரையாற்றவுள்ளனர். மேலும் சிறு குறுந்தொழில் துவங்குவது குறித்தும் மற்றும் வங்கியில் கடன் பெறுவது குறித்தும் நிபுணர்கள் விரிவான பயிற்சி அளிக்கிவுள்ளனர். இப்பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறும், விருப்பமுள்ளவர்கள் பின்வரும் முகவரி மற்றும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 94887 37465, 0452-2422955, 0452 2422956.

Spread the love