October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அறுவடை பணியில் விவசாயிகள் ஆர்வம்

ஊட்டி, அக்.8

கோத்தகிரி பகுதியில் கேரட் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தேயிலைக்கு அடுத்தப்படியாக, மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு, அதிக பரப்பளவில் கேரட் பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்துள்ள நிலையில், கேரட் மகசூல் அதிகரித்துள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் உள்ளூர் மண்டிகளில், ரூ.50 முதல் ரூ.55 வரை விலை கிடைக்கிறது. இந்நிலையில், பெரும்பாலான விவசாயிகள் வியாபாரிகளுக்கு மொத்தமாக விலை பேசி அறுவடை செய்ய அனுமதி கொடுக்கின்றனர். இதனால், போக்குவரத்து செலவு குறைந்து, லாபம் கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Spread the love