June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

அறுவடை பின்சார் தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜூன் 7

கிருஷ்ணகிரி வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம் (அட்மா) 2022-23ம் ஆண்டிற்கான கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் (KAVIADP) தேர்ந்தேடுக்கப்பட்ட பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் அறுவடை பின்சார் தொழில் நுட்ப மேலாண்மை மற்றும் சிறுதானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப விளக்க பயிற்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் V.சுரேஷ்குமார், வேளாண்மை உதவி இயக்குநர், கிருஷ்ணகிரி கலைஞர் அவர்களின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள் மதிப்பு கூட்டு பொருட்கள் தாயரித்தல் மற்றும் சந்தைபடுத்துதல், அதன் முக்கியதுவம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பூமதி, தொழில்நுட்ப வல்லுநர், மனையியல், ICAR-KVK சிறுதானியங்கள், எண்ணெய்வித்து பயிர்களில் மதிப்புகூட்டு பொருட்கள் தாயரிக்கும் முறைகள் பற்றியும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பயிற்சி வழங்குதல்
மற்றும் அதன் பயன்களை பற்றி கூறினார். ச.எலிசபெத் மேரி, வேளாண்மை அலுவலர், கிருஷ்ணகிரி, உழவர் நலத்துறையில் செயல்படுத்தபடும் திட்டங்கள் மற்றும் கலைஞர் அவர்களின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் S.சென்னகேசவன், தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுதல் குறித்து விளக்கினார்.

இப்பயிற்சிக்கு உதவி தொழில்நுட்ப மேலாளர், சண்முகம், பார்வதி ஏற்பாடு செய்திருந்தனர், இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பஞ்சாயத்து தலைவர், மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Spread the love