January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனத்தின் புதிய லோகோ அறிமுகம்

மும்பை, டிச.24

இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர் , தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கவுள்ள ஆகாசா ஏர் என்னும் புதிய விமான சேவை நிறுவனத்தின் லோகோ அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நாட்டில் அடுத்தாண்டு ஆகாசா ஏர் என்கிற புதிய விமான சேவை தொடங்கவுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அந்நிறுவனத்தின் லோகோ மற்றும் வடிவமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இட்ஸ் யுவர் ஸ்கை என்கிற தலைப்பில் ஆகாயத்தையும் சூரியனையும் முன்னிலைப்படுத்தி ஆரஞ்சு மற்றும் நீல நிறந்தில் “தி ரைசிங் ஏ’ என்கிற லோகோ வடிவமைக்கப்பட்டதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 2022 மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் இந்த விமான சேவை நிறுவனம் போயிங் நிறுவனத்திடம் 72 மேக்ஸ் 737 போயிங் ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்ததக்கது.

Spread the love