May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆக்சிஸ் வங்கி பங்குகளை விற்பனை மூலம் ரூ.4000 கோடி திரட்டும் அரசு

புது தில்லி, மே 19
நாட்டில் கோவிட் தொற்று பணிகளுக்காக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இதன் வாயிலாக மத்திய அரசு, நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக விளங்கும் ஆக்சிஸ் வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்து விற்பனை செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது. இந்த விற்பனையின் மூலம் மத்திய அரசின் கஜானாவுக்குச் சுமார் ரூ.4000 கோடி அளவிலான நிதி சேர்ந்துள்ளது.

மத்திய அரசு மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி, மத்திய அரசு யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வாயிலாக ஆக்சிஸ் வங்கியின் 2 சத பங்குகளை ஆபர் பார் சேல் பிரிவின் கீழ் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசு இந்த விற்பனையின் கீழ் சுமார் 5.8 கோடி பங்குகளை விற்பனை செய்கிறது, இதன் வாயிலாக ரூ.4000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட உள்ளது.

Spread the love