August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆக்ஸிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகை தமிழக அரசு உத்தரவு

சென்னை, மே 13

கோவிட் தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பாவது:

ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம், இரண்டு சம ஆண்டு தவணைகளில் வழங்கப்படும்.

குறைந்தபட்சம் நாயளான்றுக்கு 10 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பெரிய நீர்ம ஆக்சிஜன், உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க 2021 ஜன.,1 முதல் 2021 நவ.,30 வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு 30 சதவீத மூலதன மானியம் 5 ஆண்டுகளில் வழங்கப்படும்.

அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி மானியத்துடன் உடனடியாக கடன் வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Spread the love