May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க மாருதி திட்டம்

புது தில்லி, ஏப்.29

நாட்டில் ஆக்ஸிஜன் குறைகளை தீர்க்க மத்திய அரசு, மாநில அரசுகளும் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆக்சிஜன் உற்பத்தியினை தொடங்கியுள்ளன. மேலும், அவற்றுக்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்தும் வருகின்றன. அரசும் பல இடங்களில் புதியதாக ஆக்சிஜன் உற்பத்தியினை தொடங்க அனுமதி கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா, அதன் ஆலையில் வாகன உற்பத்தியினை தற்காலிகமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது.

வாகன உற்பத்தியை நிறுத்திய கையோடு, ஆக்சிஜன் உற்பத்தியினை செய்யப் போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆலை பராமரிப்புக்காக ஜூன் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது இந்தியாவில் மக்கள் ஆக்சிஜனுக்காக தள்ளாடி வரும் நிலையில், அதனை முன் கூட்டியே செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் ஹரியானாவில் உள்ள மாருதியின் அனைத்து ஆலைகளும் மே 1 முதல் மே 9 வரை அதன் ஆலை பராமரிப்புக்காக பணி நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அனைத்து ஆலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதாகவும் அறிவித்துள்ளது. கார் உற்பத்தியின் போது, மாருதி சுசூகி அதன் தொழிற்சாலைகளில் சிறிய அளவிலான ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

தற்போது உள்ள நெருக்கடியான நிலையில், கிடைக்கக்கூடிய குறைந்த அளவிலான ஆக்சிஜனும், மக்கள் உயிர்களை காப்பாற்ற பயன்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என மாருதி தெரிவித்துள்ளது. இதே போல சுசூகி மோட்டார் குஜராத் நிறுவனமும் இதே முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Spread the love