June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆடிப்பட்டத்திற்கேற்ற உளுந்து இரகங்களும் அவற்றின் சிறப்பியல்புகளும்

மனிதனுக்கு தேவையான புரதச் சத்தினை அளிப்பதில் பயறுவகைப் பயிர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. குறிப்பாக சைவ உணவு உட்கொள்ளும் மக்களுக்கு தேவையான புரதம் பயறுவகைப் பயிர்களில் இருந்தே கிடைக்கிறது. தமிழகத்தில் பயிரிடப்படும் பயறுவகைப் பயிர்களில் மிக முக்கியமானதும் அதிக இடத்தில் பயிரிடப்படுவதும் உளுந்து ஆகும். உளுந்துப் பயிரானது சுமார் 4.26 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதிலிருந்து ஆண்டொண்றுக்கு 3.01 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் சராசரி விளைச்சல் எக்டருக்கு 707 கிலோவாக உள்ளது. உளுந்தில் உற்பத்தியை பெருக்க கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகளில் மிக முக்கியமானது பருவத்திற்கேற்ற நல்ல உயர் விளைச்சல் தரக்கூடிய இரகங்களை தேர்வு செய்வதாகும். தமிழகத்திற்கேற்ற பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மையுடைய வறட்சியை தாங்கி வளரக்கூடிய புதிய இரகங்களையும் அதன் சிறப்பியல்புகளையும் பற்றிய விபரத்தினை இங்கு காண்போம்

  1. வம்பன் 6
    இந்த இரகம் 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆடி பட்டத்தில் பயிரிட ஏற்றது. இது வம்பன் 1ஒ விக்னா முங்கோ வர் சில்வஸ்டிரிஸ் 1 ஆகியவற்றை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. 65 – 70 நாட்களில் முதிர்ச்சி அடையக்கூடியது. விளைச்சல் சாரசரியாக இறவையில் எக்டருக்கு 871 கிலோவும் மானாவாரியில் 850 கிலோவும் இருக்கும். இந்த இரகம் ஒத்த முதிர்ச்சியடையும் தன்மை கொண்ட தீர்மானமான வளர்ச்சி அடையக்கூடிய வெடிக்காத காய்கள் மற்றும் மஞ்சள் தேமல்; நோய்க்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது. அத்துடன் காய்ப்புழுவிற்கு மிதமான எதிர்ப்புத்தன்மை கொண்டது.
  2. வம்பன் 8
    இந்த இரகம் 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்த இரகம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆடி பட்டத்தில் பயிரிட ஏற்றது. இது வம்பன் 3 ஒ விபிஜி 04–008 ஆகியவற்றை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது 70 – 75 நாட்களில் முதிர்ச்சி அடையக்கூடியது. இதன் விளைச்சல் எக்டருக்கு சராசரியாக இறவையில் 988 கிலோ மற்றும் மானாவாரியில் 871 கிலோவாகவும் உள்ளது. இதன் சிறப்பியல்புகளைப் பார்த்தோமானால் ஒத்த முதிர்ச்சியடையும் தன்மை, தீர்மானமான வளர்ச்சி, வெடிக்காத காய்கள், மஞ்சள் தேமல், எதிர்ப்புத் தன்மை கொண்டது, இலை சுருட்டு நோய் மற்றும் சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்தன்மை கொண்டது, அதிகம் மாவு காணும் திறன் கொண்டது.
  3. வம்பன் 10
    இந்த இரகம் இந்திய அளவிலான ஆராய்ச்சி முடிவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் புரட்டாசி (ராபி) பருவத்ததிற்கு ஏற்ற இரகமாக 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது.; தமிழகத்தில் அனைத்து பருவத்திற்கும் ஏற்ற இரகமாக உள்ளது. இந்த இரகம் வம்பன் 1ஒ யு.எச் 04-04 ஆகிய வளர்ப்புகளை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. 70 -75 நாட்களில் முதிர்ச்சி அடையக்கூடிய சராசரியாக 1130 கிலோ விளைச்சலைத்தரக் கூடிய இரகமாகும். மற்ற சிறப்பியல்புகளைப் பார்த்தோமானால் இது ஒத்த முதிர்ச்சியடையும் தன்மைஇ தீர்மானமான வளர்ச்சிஇ மஞ்சள் தேமல்; எதிர்ப்புத்தன்மை கொண்டஇ இலை சுருட்டு நோய் மற்றும் சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்தன்மை கொண்டது.
  4. வம்பன் 11
    இந்த இரகம் 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்த இரகம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆடி பட்டத்தில் பயிரிட ஏற்றது. இது பி.யு 31 மற்றும் கோ 6 ஆகிய வளர்ப்புகளை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட இரகமாகும். 70 முதல் 75 நாட்கள் வயதுடைய இந்த இரகத்தின் சராசரி விளைச்சல் எக்டருக்கு 896 கிலோவாகும். இது ஒத்த முதிர்ச்சியடையும் தன்மை மற்றும் தீர்மானமான வளர்ச்சி உடைய இரகம். மஞ்சள் தேமல் எதிர்ப்புத்தன்மை கொண்டது மற்றும் இலை சுருட்டு நோய் மற்றும் சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்தன்மை கொண்ட இரகமாகும்
  5. உளுந்து கோ 7
    இந்த இரகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த இரகம் வம்பன் 5 ஒ விக்னா முங்கோ வர் சில்வஸ்டிரிஸ் 22/10 ஆகிய வளர்ப்புகளை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. 70 – 75 நாட்கள் வயதுடைய இந்த இரகம் தமிழகம் முழுவதும் ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் பயிரிட ஏற்றதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் சராசரி விளைச்சல் எக்டருக்கு 880 கிலோ. ஒத்த முதிர்ச்சியடையும் தன்மை இயந்திர அறுவடைக்கு ஏற்றது. இது தீர்மானமான வளர்ச்சி மற்றும் அதிக எடையுடைய விதைகள் கொண்டது. மஞ்சள் தேமல்; எதிர்ப்புத்தன்மை கொண்டது மற்றும் இலை சுருட்டு நோய் மற்றும் சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்தன்மை கொண்டது. இதில் அதிக புரதம் 22.3 சதம் கொண்டது.

மேற்கூறிய இரகங்களில் விவசாயிகள் அவரவர் பகுதிக்கு ஏற்ற இரகங்களை தேர்வு செய்து பயிரிட்டு பயன் பெறலாம் என முனைவர் ப.சாந்தி, முனைவர் கே.நெல்சன் நவமணிராஜ், முனைவர் த.செந்தில் குமார் மற்றும் முனைவர் வி.மு.இந்துமதி, வேளாண் அறிவிவல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை தெரிவித்தனர்.

Spread the love