June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆண்டிமடம் வட்டாரத்தில் கரும்பு சாகுபடி மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்ப பயிற்சி

அரியலூர், ஜூன் 10

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் அணிக்குதிச்சான் வடக்கு மற்றும் அய்யூர் கிராமங்களில் திருந்திய கரும்பு சாகுபடி மற்றும் மண்புழு உரம் உற்பத்தி செய்தல் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிகளுக்கு ஆண்டிமடம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜலட்சுமி தலைமையயேற்று கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்முறைகள் குறித்தும், வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு வேளாண் இடுபொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வேளாண்மை பொறியியல் துறை சார்பாக உதவி செயற்பொறியாளர் சதான் உசேன் பண்ணைக் கருவிகள் வாடகை திட்டம், சோலார் மின் இணைப்பு, மதிப்பு கூட்டுதலுக்கான இயந்திரங்கள் முதலிய திட்டங்கள் குறித்து விளக்கினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கிரிடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன், முன்னதாக அணிக்குதிச்சான் வடக்கு கிராமத்தில் திருந்திய கரும்பு சாகுபடி முறையின் முக்கிய தொழில்நுட்பங்களான ஒற்றைப்பரு நாற்றுகள் கொண்டு நடவு செய்தல், ஊடுபயிர் சாகுபடி, களை கட்டுபாடு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் கரும்பில் தற்போது தோன்றி வரும் பொக்காபோயிங் எனும் புதிய நோயின் அறிகுறிகள் மற்றம் கட்டுபாட்டு முறைகள் குறித்தும், பின்னர் அய்யூர் கிராம பயிற்சியில் தொழுஉரம் மற்றம் பண்ணைக்கழிவுகளிலிருந்து மண்புழு உரம் தயாரித்தலில் மண்புழுக்களின் வகைகள், மண்புழு உரப்படுக்கை அமைத்தல் மற்றும் பராமரிப்பு மற்றும் உரம் சேகரித்தல் தொடர்பான தொழில்நுட்ட செய்திகளை விளக்கினார். மேலும் பயிற்சியில் அட்மா திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு இனங்கள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி விளக்கினார். பயிற்சிக்கு உதவி வேளாண்மை அலுவலர்கள் பழனிவேல் மற்றும் அரிகிருஷ்ணன் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் குமணன் மற்றம் ஆரோக்கியராஜ் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

Spread the love