August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆண்டிமடம் வட்டாரம் காங்குழி கிராமத்தில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி

அரியலூர், ஜூலை 2

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் காங்குழி கிராமத்தில் மீன் வளர்ப்பு முறைகள் குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. காங்குழி ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் மற்றும் கவுன்சிலர் தனசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்முறைகள் குறித்தும், வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு வேளாண் இடுபொருட்கள் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் அரிகிருஷ்ணன், விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கிரிடு வேளாண்மை அறிவியல் மையம் சார்பாக கால்நடை மருத்துவர் கார்த்திக், மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்களில் பின்பற்ற வேண்டிய முக்கிய தொழில்நுட்பங்களான பண்ணைக்குட்டை அமைத்தல், நீர் பரிசோதனை, பழைய குட்டைகளை புதுப்பிக்கும் முறைகள், மீன் குஞ்சுகள் தேர்வு, எண்ணிக்கை பராமரித்தல், தீவனம் அளவு மற்றும் இடுமுறைகள், நோய் மேலாண்மை முறைகள் குறித்தும் விளக்கினார். மேலும் பயிற்சியில் அட்மா திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு இனங்கள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி விளக்கினார்.

Spread the love