August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆண்டிமடம் வட்டார விவசாயி களுக்கு பயிர் பாதுகாப்பு மருந்து களை உபயோகிக்கும் பயிற்சி

அரியலூர், ஜூலை 2

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பான முறையில் உபயோகிக்கும் முறைகள் குறித்த பயிற்சி பெரிய கருக்கை கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியில் பாதுகாப்பு மருந்துகளை தெளிக்கும்போது பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து கிரிடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் கௌத்தீஷ், கூறினார். மேலும் பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு கடலை, உளுந்து மற்றும் நெல் பயிர்களில் தற்போது காணப்படும் பூச்சி நோய்களை கட்டுப்படுத்த தேவையான மருந்துகள் குறித்தும் விளக்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் கலைமதி, அட்மா திட்ட பணியாளர்கள் அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

Spread the love