August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆத்தி

ஆத்தி, திருவாத்தி, காட்டாத்தி, இடி தாங்கி மரம் என அழைப்பார்கள். இரண்டாய் பிரிந்த இலைகளையும், வெள்ளை நிற ஐந்து இதழ் உள்ள சிறு பூக்களையும், தட்டையான காய்களை உடையது. சிறு மரம், இலை, பூ, மொட்டு, காய், பிஞ்சு, பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையது. சிறுநீர் பெருக்குதல், குருதிப் போக்கு அடக்குதல், சீத கழிச்சல் தணித்தல், உடலுறவு ஆக்குதல், காமம் பெருக்குதல் ஆகிய குணமுடையது. இலையை அல்லது மொட்டுக்களை பச்சையாகவோ உயர்ந்ததாகவோ 50 கிராம் அரை லிட்டர் நீரில் இட்டு நாளில் ஒன்றாய் காய்க்கு வடிகட்டி வேலைக்கு 50 மில்லி அளவாக கொடுத்து வர சீதக்கழிச்சல் குணமாகும். மர பட்டை அல்லது வேர்பட்டை 60 கிராம் பஞ்சு போல் இடித்து 600 மில்லி லிட்டர் நீரில் இட்டு நாளில் ஒன்றாய் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு 50 மில்லி அளவாக காலை, மாலை, மதியம் கொடுத்து வர மண்ணீரல் வீக்கம் தீரும். பசியின்மை, நீர்த்த கழிச்சல், சீதக்கழிச்சல், குடல் புழுக்கள் தீரும். விதையை தாடி விட்டு அரைத்து மேற்பூச்சாக தடவி வர விலங்கு கடிகளால் ஏற்படும் நஞ்சு விலகி புண் ஆறும். பட்டை பொடியை அரிசி கழுவிய நீரால் அரைத்து பற்று போட கட்டி வீக்கம் ஆகியவை குணமாகும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love