May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆந்திராவிலிருந்து அரிசி, கோதுமை வருகை

திண்டுக்கல், மே 19

திண்டுக்கல்லுக்கு ஆந்திராவில் இருந்து அரிசியும், பஞ்சாப்பில் இருந்து கோதுமையும் செவ்வாய்க்கிழமை சரக்கு ரயில் மூலமாக வந்தது.

ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசியை ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும், கோதுமையை வடமாநிலங்களில் இருந்தும் அரசு கொள்முதல் செய்கிறது. மாதந்தோறும் தேவைக்கேற்ப சரக்கு ரயில்கள் மூலம் அரிசி, கோதுமை, தானியங்கள் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து திண்டுக்கல், தேனி, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். அதன்படி, செவ்வாய்க்கிழமை அன்று ஆந்திராவில் இருந்து 3500 டன் அரிசியும், பஞ்சாப்பில் இருந்து 3500 டன் கோதுமையும் சரக்கு ரயிலில் வந்தது. இவை 3 மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்டும் என, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Spread the love