October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆன்லைன் நிறுவனங்கள் பண்டிகை விற்பனை 4 நாளில் வருவாய் ரூ.20,000 கோடி ஈட்டியது

பெங்களூரு, அக்.11

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் அக்டோபர் 2- முதல் சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளன. இதில் 5-ம் தேதி வரையிலான நான்கு நாட்களில் மட்டும் ரூ.20,000 கோடி அளவில் விற்பனை செய்துள்ளதாக ரெட்சீர் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து ரெட்சீர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த பண்டிகைக்கால விற்பனையில் மொத்தமாக ரூ.36,000 கோடி அளவில் (4.8 பில்லியன் டாலர்) விற்பனை நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பண்டிகைக்கால விற்பனை 7 நாட்கள் நடைபெற்றது. இவ்வருடம் 9 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு முதல் நான்கு நாட்களில் 67 சதம் அளவில் விற்பனை நடைபெற்றது. தற்போதைய மதிப்பீட்டின்படி இந்த ஆண்டு முதல் நான்கு நாட்களில் 57% அளவில் விற்பனை நடைபெற்றிருக்கிறது. மொத்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் 50 சதம் அளவில் பங்கு வகிக்கிறது. இந்த முறை டயர் 3 நகரங்களிலும் அதிக அளவு விற்பனை நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் நிறுவன தளங்களில் அதிக அளவு தள்ளுபடி வழங்கப்படுவதால், மொபைல் போன்கள், ஆடைகள், டிவி மற்றும் வீட்டு உபயோக சாதனங்களை ஆன்லைனில் வாங்குவது மிகப் பெரும் அளவில் அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில், இவ்வாண்டு ஆன்லைன் வழியிலான விற்பனை சென்ற ஆண்டைவிட 37 சதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love