October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆன்லைன் நிறுவனங்கள் விற்பனையாளர் விவரத்தை தெளிவாக தெரிவிக்கவும்: நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்

புது தில்லி, அக்.13

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட இணைய வர்த்தக நிறுவனங்கள், தங்களது தளம் வழியாக பொருள்களை விற்பனை செய்பவரின் அனைத்து விவரங்களையும் தங்கள் வலைதளத்திலேயே தெளிவாக தெரிவிக்க வேண்டும் என தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2020-இன் படி அந்த நிறுவனங்கள் பொருள்களை விற்பனை செய்வோரின் முழு விவரத்தையும் தங்கள் வலைதளத்திலேயே தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். இது குறித்து தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் அனுபம் மிஸ்ரா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின்படி இணைய வழி நிறுவனங்கள், தங்கள் தளத்தைப் பயன்படுத்தி பொருள்களை விற்பனை செய்பவர்களின் பெயர், முகவரி, வலைதள முகவரி, நுகர்வோர் குறைதீர் பிரிவு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருள்களில் குறைகள் இருப்பின் அதனைத் தெரிவிக்க முடியும்.

மேலும், சில இணைய வழி நிறுவனங்கள் இந்த விவரங்களை முறையாகத் தெரிவிப்பதில்லை என்று புகார்கள் வந்துள்ளன. எனவே, இணைய வழி நிறுவனங்கள் விதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும். இல்லையயனில் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love