May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆமணக்கு ரூ.1.72 லட்சத்திற்கு ஏலம்

நாமக்கல், மே 5

திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ரூ.1.72 லட்சத்திற்கு ஆமணக்கு ஏலம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விற்பனைக்குழு செயலாளர் சேரலாதன் முன்னிலையில், திருச்செங்கோடு அடுத்த உஞ்சனையில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆமணக்கு ஏலம் நடந்தது. அதில், 3,990 கிலோ ஆமணக்கை விவசாயிகள் கொண்டு வந்தனர். குறைந்தபட்ச விலை, கிலோ, ரூ.43.25, அதிகபட்சம், ரூ.43.26, சராசரி, ரூ.43.26க்கு ஏலம் நடந்தது. மொத்தம், ஒரு லட்சத்து, 73 ஆயிரத்து, 607 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Spread the love