September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆரோக்கிய இந்தியா சுதந்திரதின ஓட்ட நிகழ்ச்சியை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

விருதுநகர், செப்.11

விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு ஆரோக்கிய இந்திய சுதந்திரதின ஓட்டம் 2.0 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் 2019 ஆண்டு முதல் ஆரோக்கிய இந்தியா எனும் தலைப்பில் தொடர் ஓட்டம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கவும், மக்களிடயே உடல் பயிற்சி மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் ஆரோக்கிய இந்திய சுதந்திரஒட்டம் 2.0 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்விழிப்புணர்வு ஓட்டத்தில் சுமார் 100 பேர்கள் கலந்து கொண்டு தேசப்பந்துமைதானத்தில் இருந்து தொடங்கி மாவட்ட விளையாட்டு மைதானம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராம சுப்பிரமணியம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளையோர் நலன் அலுவலர் ராஜா, மற்றும் மாவட்ட இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன், வட்டாட்சியர் செந்தில்வேல் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அரசுஅலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Spread the love