மும்பை, மே 3
கடந்த மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.13,227 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது, இந்நிறுவனம் கடந்த 2019-20ம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.6,348 கோடியுடன் ஒப்பிடும்போது இருமடங்குக்கும் அதிகமாகும்.
மேலும், மதிப்பீட்டு காலாண்டில் ரிலையன்ஸ் வருவாய் 13.6 சதம் அதிகரித்து ரூ.1,72,095 கோடியாக இருந்தது. இருப்பினும், 2020-21ம் முழு நிதியாண்டில் இந்நிறுவனம் ஈட்டிய வருவாய் 18.3 சதம் சரிவடைந்து ரூ.5,39,238 கோடியாகவும், நிகர லாபம் 35 சதம் அதிகரித்து ரூ.53,739 கோடியாகவும் இருந்தது. 2021 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.7 ஈவுத்தொகை வழங்குவதாக என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.