கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் பொருட்களை ஆர்கானிக் (அங்கக) முறையில் உற்பத்தி செய்த வருகின்றனர். நமது அரசும் ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்ய விவசாய பெரு மக்களை உற்சாகப்படுத்தி வருகின்றது. உலக அளாவிய சூழ்நிலையிலும் குறிப்பாக கொரோனா தாக்குதலுக்குப் பின் தரமான சத்தான உணவுகளை மக்கள் தேடி அறிந்து உண்டு வருகின்றனர். எனவே ஆர்கானிக் உணவுகளுக்கு தற்போது சந்தையில் நல்ல வரவேற்வு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் ஆர்கானிக் முறையில் உற்பத்தி செய்த விளை பொருட்களை தொலை தூரங்களுக்கு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமானால், ஆர்கானிக் சான்றிதழ் முக்கியமாக தேவைப்படுகிறது. எனவே விவசாயிகள் ஆர்கானிக் சான்றிதழ் பெற்று விவசாயம் செய்யும் போது நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை மூலம் தகுதி வாய்ந்த அங்கக விவசாயிகளுக்கு NPOP என்ற தர சான்றிதழ் தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. சிறு குறு விவசாயிகளுக்கு (5 ஏக்கருக்குள்) ரூ.2700/- மற்றும் இதர விவசாயிகள் (5 ஏக்கருக்கு மேல்) ரூ.3200/-ம் சான்றளிப்பு கட்டணமாக பெறப்படுகிறது.
சான்றிதழ் விண்ணப்பிக்க கீழ்காணும் ஆவணங்கள் தேவைப்படுகிறது.
- உரிய விண்ணப்பம் ( 1A1 படிவம்)
- மண் மற்றும் நீர் பரிசோதனை முடிவு
- போட்டோ (Passport size)- 3 எண்கள்
- ஆதார்
- பான் கார்டு
- கம்பியூட்டர் சிட்டா
- FMB வரைபடம்
- ஆண்டு பயிர்த்திட்டம்
- TNOCD ஒப்பந்த கடிதம்