January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆர்பிஐயின் ஊக்கச் சலுகை திட்டங்கள் பஞ்சாப் நேசனல் வங்கி பாராட்டு

புது தில்லி, மே 7

ஆர்பிஐ அறிவித்த ஊக்கச் சலுகை திட்டங்களுக்கு, பஞ்சாப் நேசனல் வங்கியின் தலைமை செயல் அதிகாரி, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன ராவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கோவிட் தொற்று சவாலை சமாளிக்க, தனி நபர்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஊக்கச் சலுகைகளை ஆர்பிஐ, தக்க சமயத்தில், அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

மேலும், வங்கிகள் கோவிட் கடன் கணக்கை துவக்கி, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், தனி நபர்களின் கோவிட் தொற்று சிகிச்சைக்கும் கடன் வழங்க, ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.நுண் கடன் நிறுவனங்களுக்கு உதவ, ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரையிலான கடன் மறுசீரமைப்பு திட்டம், ரூ.35 ஆயிரம் கோடிக்கு அரசு கடன் பத்திரங்களை வாங்குவது ஆகியவை, நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க துணை புரியும் என்றார். ஆர்பிஐ சரியான சமயத்தில் தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love