August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் முன்பதிவை மீண்டும் நிறுத்தியது ரெவோல்ட்

மும்பை, மே 8

தனது ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மாடல்கள் முன்பதிவை ரெவோல்ட் நிறுவனம் நிறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ரெவோல்ட் நிறுவனம் இந்தியாவில் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் முன்பதிவை மீண்டும் நிறுத்தி இருக்கிறது. நாட்டில் இந்த இரு மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து முன்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் அறிமுகமான முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களாக ஆர்வி300 மற்றும் ஆர்வி400 இருக்கின்றன. இரு மாடல்களும் முதற்கட்டமாக சென்னை, தில்லி, பூனே, ஆமதாபாத், ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற பெரு நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

இந்த இரு மாடல்களும் மை ரெவோல்ட் சந்தா முறை மற்றும் ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறை என இருவிதங்களில் கிடைக்கிறது. ரெவோல்ட் ஆர்வி300 முன்பதிவு கட்டணம் ரூ. 7199 ஆகும். இதன் விலை ரூ. 94,999 ஆகும்.

ரெவோல்ட் ஆர்வி400 முன்பதிவு கட்டணம் ரூ. 7,999 ஆகும். இதன் விலை ரூ. 1.19 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Spread the love