January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை மத்திய அரசுக்கு கடற்படை கோரிக்கை

புது தில்லி, மே 10

இந்திய – பசிபிக் கடல் பகுதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை என, அரசுக்கு கடற்படை கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பு குறித்து, இந்திய கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளதாவது:

குஜராத் மாநிலம் கீவாடியாவில், முப்படை கமாண்டர்களின் மாநாடு சமீபத்தில் நடந்தது. அப்போது, இந்திய – பசிபிக் கடல் பகுதியில், இந்தியா சந்தித்து வரும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள, கடற்படைக்கு ஆறு அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை என தெரிவிக்கப்பட்டது.

மேலும், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் எடுத்து வரும் பணியில், போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடியுடன் சமீபத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தேவை குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டது. ராணுவ அமைச்சகத்துடன் ஆலோசிப்பதாக பிரதமர் உறுதியளித்தார். அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்களை, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தினால், இந்திய – பசிபிக்கடல் பகுதி பாதுகாப்பாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

Spread the love