ஆற்றலரி ஆற்றங்கரையின் உட்புறம் வளரும் செடி இனம். செந்நிற தண்டும், நீண்ட இலைகளையும், செந்நிற கதிர்களையும் உடையது. வேர், விதை ஆகியவை மருத்துவ குணம் உடையது. வயிற்று வாய்வு அகற்றி ஆகவும், சதை நரம்புகளை சுருங்கச் செய்து சீழ் குருதி கசிவுகளை தடுக்கும் மருந்தாகவும் செயல்படும். இலை, காம்புகளை நீரிலிட்டு அவித்து எடுத்து நீரை கொண்டு புண்களை கழுவ அவை விரைந்து ஆறும். மூன்று கிராம் விதையை பாலில் அரைத்து குடித்து வர வயிற்று வலி, வயிற்றுப் பிடுங்கள் ஆகியவை தீரும். வேரை நீரிலிட்டு கொதிக்க வைத்து வடிகட்டிய குடிநீரை குடித்து வர உடல் குளிர்ச்சி அடையும் மென்மை பெறும்.
நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.
Spread the love