பெரம்பலூர், மார்ச் 9
ஆலத்தூர் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் செயல்படுத்தபடும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணை கருவிகள் மற்றும் பனை விதைகள், மரக்கன்றுகள் விநியோகம் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் மற்றும் பெரம்பலூர் வேளாண்மை துணை இயக்குநர் (மதி) தலைமையில் விநியோகம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டாரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இரூர், காரை, நாரணமங்கலம், நக்கசேலம், கீழமாத்தூர் மற்றும் அல்லிநகரம் கிராமங்களில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணை கருவிகள் விநியோகம் ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பாபு, முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பனை விதைகளை நிலங்கள் மற்றும் வரப்பு ஓரங்களில் நடுவதற்காக விநியோகம் செய்யப்பட்டது மற்றும் தமிழ்நாடு பசுமை போர்வைக்கான இயக்க திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மரகன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.