October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து விரைவாக மீண்டு வருகிறது: நிதியமைச்சகம்

புது தில்லி, அக்.12

இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து விரைவாக மீட்சியடைந்து வருவதாக நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை சீர்திருத்தங்கள் மற்றும் தடுப்பூசி திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருவது ஆகியவற்றின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து விரைவாக மீண்டு வருகிறது.

மேலும், வேளாண் துறையில் நீடித்த மற்றும் வலுவான வளர்ச்சி, தயாரிப்பு- தொழில்துறையில் வேகமாக மீட்சி, சேவை நடவடிக்கைகள் மீண்டும் புத்துயிர் பெற்றது உள்ளிட்டவை பொருளாதாரம் சிறப்பாக முன்னேற்றமடைந்து வருவதை காட்டும் அளவுகோலாக உள்ளது.

மேலும், 2021-22ம் நிதியாண்டில் தொடர்ந்து ஆறு மாதங்களாக நாட்டின் ஏற்றுமதி 3,000 கோடி டாலரை தாண்டி வருவதால் இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிப்புற காரணிகளும் பிரகாசமான வாய்ப்புகளை வழங்கி வருவதாக நிதியமைச்சகத்தின் செப்டம்பர் மாத ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Spread the love