September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியப் பொருளாதாரம் வரும் காலாண்டுகளில் வலுவான வளர்ச்சியை தக்கவைக்கும்: எஸ்&பி ஆய்வு

புது தில்லி, செப்.9

நாட்டின் பொருளாதாரம் வரும் காலாண்டுகளில் மேலும் வலுவான வளர்ச்சியை தக்க வைக்கும் என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான எஸ்&பி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் ஆண்ட்ரூ வுட் தெரிவித்துள்ளதாவது:

மேலும், உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பால் பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையிலும், வரும் காலாண்டுகளில் வலுவான பொருளாதார வளர்ச்சியை இந்தியா பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.5 சதமாகவும், அடுத்த ஆண்டில் இது 7 சதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிதிப்பற்றாக்குறையானது மேலும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும், கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் நிலையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது சர்வதேச சந்தையில் இந்தியாவின் ஸ்திரத்தன்மை மேலும் வலுப்பெற்றுள்ளது. இது, இந்தியாவின் கடன்தகுதி மதிப்பீட்டுக்கு மிகவும் ஆதரவான நிலையை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Spread the love