January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவின் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி விகிதம் 11.1 சதமாக இருக்கும்: கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு

புது தில்லி, மே 5

இந்தியாவின் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி விகிதம் குறையும் என அமெரிக்காவின் முக்கிய மதிப்பீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளதாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 11.7 சதமாக இருக்கும் என முன்பு கோல்ட்மேன் சாக்ஸ் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது 11.1 சதமாக இருக்கும் என கணித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் பொது முடக்கம் இல்லை என்றாலும், கோவிட் தொற்று இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தேவை குறையும். அதேபோல, வேலை இழப்புகளும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இவற்றின் எதிரொலியாக, வளர்ச்சி விகிதம் குறையும் என கோல்ட்மேன் சாக்ஸ் கணித்திருக்கிறது. ஜிடிபி வளர்ச்சி குறையும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்துக்கு முன்பும் பல நிறுவனங்கள் கணித்திருக்கின்றன.

நடப்பு நிதி ஆண்டில் 13.6 சத வளர்ச்சி இருக்கும் என நொமுரா முன்பு கணித்திருந்தது. ஆனால், தற்போது 12.6 சத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என நொமுரா கணித்திருக்கிறது. அதேபோல, ஜேபி மார்கன் நிறுவனம் 13 சத வளர்ச்சியில் இருந்து 11 சத வளர்ச்சியாக குறையும் என கணித்திருக்கிறது. மேலும், யுபிஎஸ் நிறுவனம் 11.5 சத வளர்ச்சி இருக்கும் என முன்பு கணித்திருந்தது. ஆனால், 2ம் அலை தீவிரமானதால் நடப்பு நிதி ஆண்டில் 10 சத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என தெரிவிக்கிறது.

ஆர்பிஐ நடப்பு நிதி ஆண்டின் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 10.5 சதமாக இருக்கும் என கணித்திருக்கிறது. அதேபோல, உலக வங்கி 10.1 சத வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறது.பெருந்தொற்றுக்கு முன்பு இருந்தே இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைந்து வந்தது. 2017-ம் நிதி ஆண்டில் 8.3 சத வளர்ச்சி இருந்தது. அடுத்தடுத்த நிதி ஆண்டுகளில் 6.8 சதம் மற்றும் 6.5 சதமாக குறைந்தது. 2020-ம் நிதி ஆண்டில் சதமாக இருந்தது. 2021-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8 சதம் வரை சரியக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

Spread the love