October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதமாக இருக்கும்: ஐஎம்எஃப் தகவல்

வாஷிங்டன், அக்.13

நடப்பு நிதி ஆண்டில் இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி 9.5 சதமாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும் இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாகவும் சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி,சர்வதேச நிதியம் ஆகியவற்றின் வருடாந்திர கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், உலக பொருளாதார நிலை குறித்து சர்வதேச நிதியம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, 2020இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதமாக குறைந்தது. 2021இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதமாகவும், 2022ல் 8.5 சதமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மெய்நிகர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், இந்தியாவுக்கான இந்த ஆண்டுக்கான வளர்ச்சி கணிப்பில் எங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. கொரோனா 2வது அலை கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு தரநிலையில் இறக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது, மிகவும் கடினமாக கொரோனா 2வது அலையில் இருந்து இந்தியா வெளிவந்துள்ளது என்று தெரிவித்தார். தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாகவும் இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Spread the love