August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவில் உருமாறிய கோவிட் பரவல் உலக சுகாதார அமைப்பு கவலை

நியூயார்க், மே 11

இந்தியாவில் பரவி வரும் பி-1617 வகை உருமாற்ற கோவிட் தொற்று கவலையளிப்பதாக என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவில் கோவிட் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் நிலை உலக நாடுகளுக்கே கவலையளிப்பதாக இருப்பதால், பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக்குழுத் தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

பி.1.617 வகை உருமாற்ற கோவிட் தொற்று முதன்முதலில் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இந்த தொற்று பரவலின் வேகம் கவலையளிப்பதாக இருக்கிறது. மேலும், எங்களின் தொற்றுநோய் தடுப்பு குழு, ஆய்வகக் குழுவினர் சேர்ந்து, உலக சுகாதார அமைப்பின் வைரஸ் பரிணாம பணிக்குழுவுடன் இந்த உருமாறிய தொற்று குறித்து ஆலோசித்தோம். இந்த வைரஸின் பரவல் தன்மை, இந்தியாவில் பரவி வருவது, மற்ற நாடுகளில் பரவல் சூழல் ஆகியவை குறித்து ஆலோசித்தோம் என தெரிவித்தார்.

மேலும், இந்த ஆலோசனை மற்றும் ஆய்வில், பி-1617 வகை வைரஸ்களின் பரவல் வேகம் மற்ற வைரஸ்களைவிட அதிகரித்துள்ளது. இதனால்தான் உலகளவில் இந்தியாவில் பரவும் பி-1617 வகை வைரஸ் பற்றி ஆழ்ந்த கவலை உருவாகியுள்ளது என மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.

Spread the love