January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவில் கூகுள் நியூஸ் ஷோகேஸ் அறிமுகம்

புது தில்லி, மே 19

கூகுள் நிறுவனம், இந்தியாவில் கூகுள் நியூஸ், டிஸ்கவர் வலைதளப் பிரிவுகளில், ‘நியூஸ் ஷோகேஸ்’ என்ற செய்திப் பலகையை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், சிறந்த செய்திகள், கருத்துருக்கள் ஆகியவற்றை தரும், அச்சு மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு சன்மானம் தரப்படும் என, கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் நியூஸ், டிஸ்கவர் வலைதளங்களில் உள்ள நியூஸ் ஷோகேஸ் பகுதியில், ஜெர்மனி, கனடா, பிரேசில், பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, 700 செய்தி நிறுவனங்களின் தலைப்புச் செய்திகள் இடம் பெறுவதாக தெரிவித்துள்ளன. இந்நிறுவனங்களுடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. நெட்டிசன்கள், இந்த செய்திப் பலகையில், தங்களுக்கு பிடித்த தலைப்பை, கிளிக் செய்து, சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தின் வலைதளத்திற்கு சென்று விரிவான செய்தியை படிக்க முடியும். இத்தகைய வசதியை, கூகுள் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து, கூகுள் துணை தலைவர் பிராட் பென்டர் தெரிவித்துள்ளதாவது:

நியூஸ் ஷோகேஸ், ஏற்கனவே பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றும், இந்தியாவில் தற்போது அறிமுகமாகியுள்ளது என்றும் தெரிவித்தார். இதற்காக, 30 செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்¼ளாம். மேலும், பல நிறுவனங்களை இணைக்க உள்¼ளாம். இதன் மூலம், அச்சு, ஊடக செய்தி நிறுவனங்கள், நம்பிக்கைக்குரிய செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். அத்துடன் அந்நிறுவனங்களுக்கு, கூகுள் மூலம் குறிப்பிட்ட தொகையும் கிடைக்கும் என்றார்.

ஆங்கிலம், இந்தி மொழிகளைத் தொடர்ந்து விரைவில் பிராந்திய மொழிகளிலும் இச்சேவை அறிமுகமாகும். அடுத்த மூன்று ஆண்டுகளில், 50 ஆயிரம் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையியல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, கூகுள் இலக்கு நிர்ணயித்துள்ளது என்று பிராட் பென்டர் தெரிவித்தார்.

Spread the love