ஜெனீவா, ஏப்.28
இந்தியாவில் கோவிட் தாக்கிய 15 சதம் பேருக்குத்தான் சிகிச்சை தேவைப்படுகிறது என உலக சுகாதார மையம் கருத்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் கோவிட் தொற்று பாதிப்பு மோசமாக இருப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜாசரெவிக் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது. இதிலும் குறைவானவர்களுக்குத்தான் ஆக்சிஜன் அவசியமாகிறது என்றார்.
ஆனால் தற்போது பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்று பார்த்தால், சரியான தகவல்கள், ஆலோசனைகள் கிடைக்காததின் விளைவாக பலர் மருத்துவமனையை அணுகுகிறார்கள். சமூக அளவிலான மையங்கள் நோயாளிகளை சோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பான வீட்டு பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதே நேரத்தில் ஹாட்லைன் மற்றும் டேஷ்போர்டுகள் மூலம் தகவல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.