June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவில் கோவிட் தொற்றை எதிர்கொள்ள சாம்சங் நிறுவனம் ரூ.37 கோடி நிவாரண உதவி

புது தில்லி, மே 5

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் தொற்று பாதிப்பால், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோவிட்டை எதிர்கொள்ள நிவாரண நிதி வழங்க சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: தென் கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனம், இந்தியாவில் கோவிட் தொற்றை எதிர்கொள்ள 50 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.37 கோடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த தொகை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்க சாம்ங் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்த பின் இதுபற்றிய முடிவுகள் எட்டப்பட்டதாக சாம்சங் நிறுவனம் வெளியிட்டு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட தொகையில் 30 லட்சம் டாலர்கள் மத்திய அரசு, உத்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டிற்கு வழங்கப்பட இருக்கிறது.

மீதமுள்ள 20 லட்சம் டாலர்களை மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவைகளாக வழங்குவதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது. மேலும், இத்துடன் சாம்சங் நிறுவனம் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக ஊழியர்களுக்கு இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளது.

Spread the love