August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு அனைவருக்கும் எச்சரிக்கை மணி: யுனிசெப்

நியூயார்க், மே 7

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் துயரம் அனைவருக்கும் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது என யுனிசெஃப் அமைப்பின் செயல் இயக்குநர் யஹன்ரியயட்டா ஃபோர் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கோவிட் தொற்று பாதிப்பால் உருவாகியுள்ள துயரநிலை அனைவருக்கும் எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது. மேலும், இந்த நேரத்தில் உலக நாடுகள் ஒன்றுகூடி இந்தியாவுக்கு உதவ வேண்டும். இல்லையயனில், கோவிட் தொற்று குறித்த தொடர்பான இறப்புகள், கோவிட் தொற்று உருமாற்றங்கள், மருந்து விநியோகத்தில் தாமதம் உள்ளிட்டவை உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிட் பாதிப்புக்கு உதவிடும் வகையில், 20 லட்சம் முகக் கவசங்கள், 2 லட்சம் அறுவைச் சிகிச்சை முககவசங்கள் உள்ளிட்ட உயிர் காக்கும் உபகரணங்கள் இந்தியாவுக்கு யுனிசெஃப் அமைப்பின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Spread the love