January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை 140.31 கோடியை கடந்தது

புது தில்லி, டிச.24

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 57,44,652 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, நேற்று காலை 7 மணி நிலவரப்படி 140.31 கோடியைக் (1,40,31,63,063) கடந்தது. 1,48,79,511 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 7,051 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,42,15,977. ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.40 சதவீதமாக உள்ளது. இது கடந்த மார்ச் 2020க்கு பிறகு அதிக அளவாகும்.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 57 நாட்களாக 15,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 77,516 ஆக உள்ளது; இது கடந்த 577 நாட்களில் மிகக் குறைந்த அளவாகும். நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.22 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 12,05,775 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 66.98 கோடி கொவிட் பரிசோதனைகள் (66,98,09,816) செய்யப்பட்டுள்ளன. வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 40 நாட்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.59 சதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.57 சதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 81 நாட்களாக 2 சதவீதத்திற்குக் கீழே 116 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 147.72 கோடிக்கும் மேற்பட்ட (1,47,72,11,135) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 17.97 கோடிக்கும் மேற்பட்ட (17,97,34,311) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.

வாராந்திர பாதிப்பு விகிதம் 0.59 ஆகும். இது கடந்த 40 நாட்களில் 1 சதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதுவரை மொத்தம் 66.86 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மஹாராஷ்ட்ரா, தில்லி, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 358 பேரிடம் கண்டறியப்பட்டது. இவர்களில் 114 பேர் வீடு திரும்பியுள்ளனர்/ குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 88 பேருக்கு தொற்று ஏற்பட்டு 42 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love