June 20, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் வேதனை

ஜெனீவா, ஏப்.27

இந்தியாவில் கோவிட் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது ஒருநாள் கோவிட் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகமாக பதிவாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கோவிட் பாதிப்பால் மிகக்கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட உலக நாடுகளும் முன்வந்துள்ளன.

இந் நிலையில், இந்தியாவில் நிலவும் கோவிட் பாதிப்பு மிகுந்த வேதனை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் நிலவும் சூழல் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. முக்கிய கருவிகள் வழங்குதல் உள்பட உலக சுகாதார அமைப்பால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று தெரிவித்தார்.

Spread the love