May 20, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் மஹிந்திரா எக்ஸ்யுவி 500

மும்பை, மே 12

இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது.

இது குறித்து விரிவான செய்தியாவது: மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் எஸ்யுவி மாடல்களை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பிரீமியம் வாகனங்களை

பல்வேறு விலை பட்டியலில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. அதன்படி எக்ஸ்யுவி 500 விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

இந் நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மஹிந்திரா தனது எக்ஸ்யுவி 500 மாடலை 2024 வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாடல் முற்றிலும் புது பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது சங்யோங் டிவோலி பிளாட்பார்மில் அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

டிவோலி பிளாட்பார்ம் அதிநவீன தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கிறது. டிவோலி பிளாட்பார்மை மேம்படுத்த மஹிந்திரா புதிய எக்ஸ்யுவி 700 மாடலை பயன்படுத்த இருக்கிறது. புதிய எக்ஸ்யுவி 500 மாடல்

எஸ்301 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தற்போதைய எக்ஸ்யுவி 500மாடலை விட அளவில் 300 எம்எம் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

மஹிந்திராவின் புதிய எக்ஸ்யுவி 500 இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்

Spread the love