January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவில் லேப்டாப், டெக்ஸ்டாப் தயாரிப்பு எச்பி நிறுவனம் துவக்கியது

சென்னை, டிச.23

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான எச்பி நிறுவனம், இந்தியாவில் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் தயாரிப்பை துவக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், எச்பி நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அதன் ஆலையில், பல்வேறு மாடல்களில் லேப்டாப், டெஸ்க்டாப் டவர்கள், மினி லேப்டாப் ஆகியவற்றை தயாரிக்க துவக்கியுள்ளது.

மேலும், இந்த தயாரிப்புகளில் சில, அரசாங்கத்தின் பொது கொள்முதல் ஆணையின் கீழ் தகுதி பெற்றிருப்பதாகவும்; அரசு துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவை அரசின் இ- மார்க்கெட்பிளேஸ் இணையதளத்தில் இடம்பெறும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில் அதிக வகையிலான லேப்டாப்புகளை தயாரிப்பது இதுவே முதன் முறையாகும்.மத்திய அரசின் “ஆத்ம நிர்பார் பாரத்’ கனவை நனவாக்கும் முயற்சியில், எச்பி நிறுவனமும் உடன் நிற்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Spread the love