August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவில் விரைவில் ரியல்மி 43-இன்ச் 4கே டிவி அறிமுகம்

புது தில்லி, ஏப்.23

ரியல்மி நிறுவனம் தனது புதிய 43-இன்ச் ஸ்மார்ட் டிவி 4கே மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 4கே ஆதரவுடன் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இது குறித்து வெளிவந்துள்ள செய்தியாவது:

இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் சரியான வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை. இருந்தபோதிலும் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் ரியல்மி நிறுவனம் எற்கனவே அறிமுகம் செய்த 32-இன்ச், 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்களைப் பற்றி பார்க்கையில், 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் முழு எச்டி திரை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவி மாடல்கள் 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது.

குரோமா பூஸ்ட் பிக்சர் எஞ்சினுடன் வருகிறது, இது 400nits பிரைட்நஸ் வசதியுடன் மேம்பட்ட பட தரத்தை வழங்குகிறது. பின்பு bezel-less டிசைன் இந்த சாதனங்களில் இருப்பதால் கண்டிப்பாக அதிக வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. ஆடியோவைப் பொறுத்தவரை இது டால்பி ஆடியோவுடன் 24w குவாட்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது. ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆல் இன் ஒன் ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப்பிற்கான வெவ்வேறு பிரத்யேக பொத்தான்களுடன் வருகிறது.

Spread the love