January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மே மாதத்தில் 14.5 சதவீதமாக உயர்ந்தது

இந்தியாவில், கடந்த மே மாத மத்தியில் வேலைவாய்ப்பின்மை 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலையின் தீவிரத்தால், பல மாநிலங்களில் பொது முடக்கம் பல நிறுவனங்கள் மூடப்பட்ட காரணத்தால் பல கோடி பேர் நாடு முழுவதும் வேலையை இழந்து வருகின்றனர்.

இதனால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்ச் மாதம் 6.50 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாத முடிவில் நாட்டின் 7.97 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது மே மாதம் 16ஆம் தேதி முடிந்த வாரத்தில் மட்டும் வேலைவாய்ப்பின்மை 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் அதிகமாக அளவீடாகப் பார்க்கப்படுகிறது என CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல் மே 19ஆம் தேதி வரையிலான கடந்த 30 நாட்களில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நகர்ப்புறத்தில் 11.8 சதவீதமாகவும், கிராமப்புறத்தில் 8.8 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

சில வாரங்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வேலைவாய்ப்பின்மை மேலும் உயர வாய்ப்புள்ளது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மே 1ஆம் தேதி 9.60 சதவீதமாக இருந்த நகரப் பகுதிக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம், மே 19ஆம் தேதி 11.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.

முதல் கொரோனா அலை முடிவதற்குள் 2வது கொரொனா தொற்று அலை வந்துள்ள காரணத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் வர்த்தகச் சந்தையிலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் உருவாகியுள்ளது.

அத்துடன் 2வது அலையின் தீவிரம் காரணமாகக் கடந்த 6 மாதத்தில் உருவான வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை மீண்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love