July 7, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்தியாவுக்கு உதவ தயார்: பிரிட்டன் பிரதமர்

லண்டன், ஏப்.24

கோவிட் தொற்றால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நாட்டில் கோவிட் 2ம் பேரலை அச்சுறுத்தி வரும் நிலையில், நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு காப்பாற்ற முடியாமல் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கோவிட் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ரெம்டெசிவர் உட்பட பல மருந்துகள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசியின் தேவையை திடீரென அதிகமாக்கியுள்ளது.

இந்தநிலையில் கரோனா தொற்று காரணமாக மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் ராய்ட்டர் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

கோவிட் பெருந்தொற்று பாதிப்பால் இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அந்நாட்டிற்கு எந்த வகையில் உதவலாம் என ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love