புது தில்லி, மே 11
நாட்டில் கோவிட் தொற்று தடுப்புப் பணிகளுக்காக டுவிட்டர் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ. 110 கோடி (15 மில்லியன் டாலர்) நிதியுதவி வழங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது:
இந்தியாவில் கோவிட தொற்று பரவல் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாட்டில் ஆக்சிஜன், படுக்கைகள், வென்டிலேட்டர் தட்டுப்பாடு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இந் நிலையில், கோவிட் தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.
அந்தவகையில் கோவிட் நிவாரண நிதியாக டுவிட்டர் இந்திய மக்களுக்கு 15 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.110 கோடி ஆகும்.
இது குறித்து டுவிட்டர் நிறுவனர் ஜேக் பேட்ரிக் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: இந்த தொகை கேர், எய்டு இந்தியா, சேவா இன்டர்நேனல் அமெரிக்கா ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் முறையே 10 மில்லியன் டாலர்(ரூ.73.47 கோடி ), 2.5 மில்லியன் டாலர்(ரூ.18.36 கோடி ), 2.5 மில்லியன் டாலர்(ரூ.18.36கோடி) என மூன்று அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.