புது தில்லி, மே 14
இந்தியாவுக்கு கோவிட் நிவாரண நிதியை எத்திரியம் இணை நிறுவனர் க்ரிப்டோகரென்சியாக வழங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: எத்திரியம் க்ரிப்டோகரென்சி இணை நிறுவனர் விடலிக் புடெரின் இந்தியாவுக்கு ரூ.7360 கோடி மதிப்பிலான ´பா இனு க்ரிப்டோகரென்சியை கோவிட் நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார். ஷிபா இனு கரென்சியை உருவாக்கியவர்கள் புடெரினுக்கு 50 சத மீம் டோக்கன்களை பரிசாக வழங்கினர்.
மேலும், உலகின் இளைய க்ரிப்டோகரென்சி கோடீஸ்வரரான புடெரின் அவற்றை தொண்டு காரியங்களுக்கு செலவிட முடிவு செய்து நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார். புடெரின் சுமார் 120 கோடி டாலர்கள் மதிப்பிலான ´ஷிபு டோக்கன்களை இந்தியா கோவிட் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார்.
இத்தகைய தொகை க்ரிப்டோகரென்சி மூலம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் இவ்வளவு க்ரிப்டோகரென்சியை இந்திய ரொக்கமாக மாற்றும் போது அதன் மதிப்பு சற்றே குறையும்.