June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்திய சந்தையில் பொலிரோ ஃபேஸ்லிப்ட் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம்

மும்பை, மே 5

விரைவில் பொலிரோ பேஸ்லிப்ட் மாடலை மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: 2021 மஹிந்திரா பொலிரோ ஃபேஸ்லிப்ட் மாடல் விற்பனையகம் வந்தடைந்தது.

தற்போதைய புகைப்படங்களின் படி 2021 மஹிந்திரா பொலிரோ மாடல் டூயல் டோன் வண்ணங்களில் கிடைக்கிறது. புது கலர் தவிர இந்த எஸ்யுவி மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் புது பொலிரோ மாடலில் ஒரே என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்சன்களில் கிடைக்கும் என தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளில் அப்டேட் செய்யப்படாத மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா பொலிரோ இருக்கிறது. இந்த ரக்கட் எஸ்யுவி கணிசமான அளவு விற்பனையாகி வருகிறது.

மேலும், புது மாடலில் ஒரே யஹட்லேம்ப் யூனிட், புது கிரில், பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டூயல் டோன் பினிஷ் இந்த காரின் முக்கிய அப்டேட் ஆக இருக்கிறது. இந்த எஸ்யுவி பேன்ஸி ஷேட் ரெட், பம்ப்பர் சேடின் கிரே நிறம் கொண்டிருக்கிறது. இதன் ரியர் வியூ மிரர்கள் பிளாக் பினிஷ் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மஹிந்திரா பொலிரோ மாடல் பி4, பி6 மற்றும் பி6 (ஒ) என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து வேரியண்ட்களும் இரண்டு வண்ணங்களில் மட்டுமே கிடைக்கிறது.

Spread the love