October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் தூய்மை இந்தியா முகாம்

ஊட்டி, அக்.13

இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம், உதகை மண்டல ஆராய்ச்சி மையம் சார்பில் கழிவுகளை உரமாக்கும் தொழில் நுட்பம் குறித்து சிறப்பு தூய்மை இந்தியா முகாம் காந்திஜெயந்தி அன்று தக்கர் பாபா நகரில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெ.கஸ்தூரி திலகம், விவசாயிகளை வரவேற்று பேசினார். மேலும் அவர் இந்நிகழ்ச்சி பயிர் கழிவுகளை உரமாக்கி பயன்படுத்த வேண்டி இன்று இந்தியா முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். பயிர்க்கழிவுகள், களைகள் போன்றவற்றை எளிதாக இயற்கைக உரமாக்கும் தொழில் நுட்பங்களையும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் முனைவர் S.M. வனிதா, கலந்து கொண்டு உரையாற்றினார். விவசாயிகளுக்கு பயிர் கழிவுகளையும், வீட்டு கழிவுகளையும் உரமாக்கும் தொழில் நுட்பம் குறித்த காணொளி காட்சிகள் காண்பிக்கப்பட்டன, மேலும் அது குறித்து கையேடுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தக்கர் பாபா நகர் மற்றும் இந்திர நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Spread the love