புது தில்லி, மே 18
பைசர் மற்றும் மாடர்னா ஆகிய கோவிட் தொற்று தடுப்பூசி மருந்துகளுக்கும் இன்னும் இந்தியாவில் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்பவர்களுக்கு மரபணு மாற்ற கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பது ஆய்வக திசு வளர்ச்சி ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூ யார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மாற்ற கோவிட் தொற்றுகளின் தாக்குதலில் இருந்து பைசர், மாடர்னா தடுப்பூசிகள் பாதுகாப்பை அளிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 6 பேருக்கு பைசரின் தடுப்பூசியும், 3 பேருக்கு மாடர்னா தடுப்பூசியும் போடப்பட்டு கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் ரத்த மாதிரிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் முதலில் கண்டறி யப்பட்ட இந்த மரபணு மாற்ற வைரசுகள் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.