October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இந்திய விதை வங்கி

கடலூர், அக்.11

பணத்தை சேமிக்கும் வங்கி, இரத்தத்தை சேமிக்கும் வங்கி, ஸ்டெம் செல் சேமிக்கும் வங்கி என இவற்றை தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நம்மில் வெகு சிலர் மட்டுமே இந்திய விதை வங்கியை அறிந்திருப்போம். இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினத்தின் ஆணிவேரும் இயற்கை தான். அந்த இயற்கைக்கு அழகு வனம். நாம் சுவாசிக்க வனத்தின் பங்கு மிக முக்கியமானது. அந்த வனத்தை உருவாக்க விதை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விதைகளை சேமித்து வைத்திருக்கும் வங்கி தான் ‘இந்திய விதை வங்கி’.

இது லடாக் யூனியன் பிரதேசம் இமயமலை தொடரான சங் லா எனும் இடத்தில் தரை மட்டத்திலிருந்து சுமார் 17,586 அடி உயரத்தில் உள்ளது. இதனை DRDO-ன் அதி உயர் ஆராய்ச்சி பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தேசிய தாவர மரபணு வளங்கள் மையம் இணைந்து 2010ம் ஆண்டு உருவாக்கியுள்ளது. இதனை உலகின் இரண்டாவது விதை வங்கி என்பர். ஏறத்தாழ 5000-க்கும் மேற்பட்ட விதைகளை -4◦C கீழ் அங்கு சேமித்து வைத்துள்ளனர். இயல்பாகவே அங்கு வெப்பநிலை மிக மிக குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதாவது இந்திய பாரதத்துக்கு போர் அல்லது பேரழிவு ஏற்படும்போது இந்த விதை வங்கியில் இருந்து விதைகளை எடுத்து வேளாண் செய்யலாம் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஒன்றிய அரசு இதனை உருவாகியுள்ளது. இங்கு பாரம்பரிய விதைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

தகவல் : பாலாஜி. க (இளநிலை வேளாண்மை 4ம் ஆண்டு, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். கைபேசி எண் : 63694 51360

Spread the love