October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

இனக் கவர்ச்சி பொறி

தற்போது பயிர் பாதுகாப்பில் இரசாயன பூச்சி கொல்லிகளைக் காட்டிலும் இனக்கவர்ச்சிப் பொறியின் பங்கு கூடி வருகிறது. பூச்சிகளைக் கண்காணிப்பது, கவர்ந்து அழிப்பது இனக்கவர்ச்சியின் முக்கிய வேலையாகும். அதே இனத்தை கவர்ந்து அழிப்பது, இனக் கவர்ச்சி பொறியின் சிறப்பாகும்.

சிறப்பு அம்சங்கள்

ஒரே இனத்தை சேர்ந்த பெண் தாய், அந்து பூச்சியைக் கவர்ந்திழுக்க ஒரு வித வாசனைப் பொருளைத் தன் உடலிலுள்ள சுரப்பிமூலம் சுரந்து, காற்றில் வெளிய விடும். இதற்கு பிரமோன் என்று பெயர். அதே இனத்தில் சேர்ந்த ஆண்பூச்சிகள், பெண் பூச்சிகளைத் தேடி சென்று புணர்வதால் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்த முட்டையில் இருந்து வரும் புழுக்கள் பயிர்களை தாக்கி சேதம் விளைவிக்கும். இவ்வாறு முட்டை இடுவதை தடுக்கவே இனக் கவர்ச்சி பொறி பயன்படுகிறது.

ஆண் பூச்சிகளுடன் சேராத பெண்பூச்சிகள் கருவுறாத முட்டைகள் இடும். இதில் இருந்து புழுக்கள் வாரது.

இனக் கவர்ச்சி பொறியின் வகைகள்

1) குழாய் போன்ற நீண்ட பாலித்தீன் பைகள் அடங்கிய பற்றி
2) நீருள்ள வட்ட பற்றி
3) முக்கோன வடிவ அட்டை வடிவ பொறி என் மூன்று வகைகள் உண்டு.

இனக் கவர்ச்சி பொறி 10-12 எண்ணம் 30 முதல் 40 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும். சராசரியாக தினமும் 2-5 பூச்சிகள் ஒரு பொறியில் வந்து விழும். இதிலிருந்தே பூச்சியின்
தன்மையைக் கவனிக்க முடியும். தாக்குதலின் தன்மைக்கேற்ப பூச்சி மருந்து தெளிக்கலாம்.

தகவல் : அக்ரி சு.சந்திரசேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love